திண்டுக்கல் வேடப்பட்டி செல்லும் வழியில் ஒத்தக்கண் ரயில்வே பாலம் உள்ளது. அதன் அடியில் சிறிது மழை பெய்தாலும் மழை நீர் தேங்கி நிற்கும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதன் காரணமாக ஒத்தக்கண் பாலத்தில் நிரந்தரமாக மழை நீர் தேங்கியுள்ளது. பெரிய அளவில் மழை பெய்தால் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் செல்லும். இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் பாலத்தைக் கடந்து செல்ல முடியாதநிலை உள்ளது.
வேடப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆகையால், ஒத்தக்கண் பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 14.11.22 திண்டுக்கல் மாநகராட்சி 35ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு தலைமையில் அப்பகுதி மக்கள் வலை விரித்து, மீன்பிடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:மிரட்டும் மழை; ஒன்பது மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு