திண்டுக்கல்: பழனி அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டு விவசாயம் செய்துவருகின்றனர். இந்நிலையில் பாலசமுத்திரம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர நீண்ட நாள்களாக கோரிக்கைவிடுத்து-வந்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பாலசமுத்திரம் கூட்டுறவுச் சங்கத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட மேலாளர் சீத்தாராமன் நேற்று (ஆக.17) திறந்துவைத்தார்.
விவசாயிகளிடமிருந்து 100 கிலோ கொண்ட சாதாரண ரக நெல் மூட்டை ஆயிரத்து 918 ரூபாய்க்கும், கிரேடு ஏ ரக நெல் 100 கிலோ கொண்ட மூட்டை ஆயிரத்து 958 ரூபாய்க்கும் கொள்முதல்செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மாவுப்பூச்சி தாக்குதல்- விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா?