ETV Bharat / state

திருநங்கை மீது பொய் புகார்: கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை! - மணல் கொள்ளை

திண்டுக்கல்: மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக திருநங்கை மீது பொய் வழக்கு போடப்பட்டதைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாட்சியர் அலுவலகம்
கோட்டாட்சியர் அலுவலகம்
author img

By

Published : Oct 5, 2020, 3:45 AM IST

திண்டுக்கல் ஒன்றியம் முத்தமிழ் நகரைச் சேர்ந்த திருநங்கை சமந்தா. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு எதிர்புறத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணல் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் டிராக்டரில் மணல் கடத்தி வரும்போது சமந்தா வீட்டில் உள்ள நாய்கள் குரைத்து இடையூறு செய்துள்ளது. இதனால் சமந்தா வளர்த்த 10க்கும் மேற்பட்ட நாய்களை சீனிவாசன் விஷம் வைத்து கொன்றதாக சமந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து சீனிவாசன் அவரது மகன் லெட்சுமணன், நிவின்குமார் என்ற அப்புக்குட்டன் ஆகியோருக்கு ஆதரவாக திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் தெய்வம், சமந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை மிரட்டியதோடு, அவரது சாதியைச் சொல்லி திட்டி, தடியால் அடித்து, வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.

மேலும் சமந்தா மீது பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைப்பதற்காக மணல் கொள்ளையர்களும், திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய ஆய்வாளரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக திருநங்கை சமந்தா கடந்த ஆறு மாதமாக தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சமந்தாவிற்கு நியாயம் கேட்டு திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஜி.ராணி, பாதிக்கப்பட்ட திருநங்கை சமந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கோட்டாட்சியர் உஷாவிடம் புகார் மனு கொடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் பாலபாரதி, சமந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.