ETV Bharat / state

போலி இரிடியம் கடத்திய கும்பல்..! மடக்கி பிடித்த போலீசார் - பழனியில் போலி இரிடியம் கடத்திய கும்பல் கைது

பழனி அருகே போலி இரிடியத்தை கடத்தி சென்ற ஆறு பேர் கொண்ட கும்பலை, காவல் துறையினர் கைது செய்தனர்.

Fake iridium smuggling gang  iridium smuggling  Fake iridium smuggling gang arrested near palani  Fake iridium  போலி இரிடியம்  போலி இரிடியம் கடத்தல்  போலி இரிடியம் கடத்திய கும்பல்  பழனியில் போலி இரிடியம் கடத்திய கும்பல் கைது  இரிடியம் கடத்தல்
போலி இரிடியம் கடத்தல்
author img

By

Published : Apr 21, 2022, 10:15 PM IST

திண்டுக்கல்: பழனி வழியாக காரில் போலி இரிடியம் கடத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்பிரிவு மற்றும் பழனி தாலுகா காவல் துறையினர் இணைந்து பழனி அருகே வண்டிவாய்க்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உடுமலையில் இருந்து பழனி நோக்கி வந்த காரை மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது காரில் இருந்த ஆறு பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காரை சோதனை செய்த காவல் துறையினர், காரில் இரிடியம் போன்ற உலோகம் இருந்ததை கண்டறிந்தனர்.

இதையடுத்து ஆறு பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, கடத்தலில் ஈடுபட்டவர்கள் உடுமலையை சேர்ந்த சையது இப்ராகீம் (27), செல்வகுமார் (31), சுந்தரராஜ் (26), விக்னேஷ் (32), அபுதாகீர் (30) மற்றும் குமரலிங்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (52) என்பது தெரியவந்தது. இவர்கள் போலி இரிடியத்தை விற்க மியன்ற போது காவலர்களிடம் சிக்கியதும் தெரியவந்தது.

பின்னர் ஆறு பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த போலி இரிடியம் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த 56 வயது பெண் கடத்தல் - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.