ETV Bharat / state

மது பாட்டிலுக்கும் கூடுதல் விலை - குடிமகன்கள் போராட்டம்! - Liquor bottles are sold at high prices

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுப் பிரியர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கடை
author img

By

Published : Aug 21, 2019, 6:44 AM IST

Updated : Aug 21, 2019, 5:11 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இயங்கிவரும் அரசு மதுபான கடையில், தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து மதுக்கடை உழியர்கள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மதுப் பிரியர்கள் இக்கடையில் மது பாட்டில் வாங்கியபோது அதிக விலை சொன்னதால் மதுக்கடை ஊழியருக்கும், மதுப் பிரியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, உரிய விலையில் மது விற்பனை செய்யக்கோரி சுமார் ஒருமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மது பாட்டிலுக்கும் கூடுதல் விலை - குடிமகன்கள் போரட்டம்...

இது குறித்து மதுப் பிரியர் ஒருவர் கூறுகையில், 'கூலி வேலைக்குச் சென்றுவிட்டு உடல் வலிக்காக மது அருந்த வரும் ஏழை மக்களிடம் மது பாட்டிலுக்கு அதிக விலை கேட்கின்றனர். இது குறித்து மண்டல மேலாளருக்கும் தெரிந்திருந்தும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்றார்.

Intro:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம்- பழனி சாலையில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்கள் அதிக விலை வைத்து விற்பதாக குடிமகன்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்.
Body:திண்டுக்கல். 20.08.19
பதிலி செய்தியாளர் ம.பூபதி

ஒட்டன்சத்திரம்- பழனி சாலையில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்கள் அதிக விலை வைத்து விற்பதாக குடிமகன்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -பழனி சாலையில் தனியார் பள்ளியின் அருகில் இயங்கி வருகிறது 3175 என்ற கொண்ட மதுக்கடை. இக்கடையானது பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடத்தில் இயங்கிவருகிறது .
தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட 10.ரூபாய் முதல் 20.ரூபாய் வரை மதுக்கடை உழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும். இன்று இக்கடைக்கு வந்த குடிமகன்கள் மதுபாட்டில் வாங்கியபோது அதிக விலை சொன்னதால் மதுக்கடை ஊழியருக்கும், குடிமகன்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு சுமார் ஒருமணி நேரம் உரிய விலையில் மது பாட்டில் விற்பனை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்பு குடிமகன்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு உடல் வலிக்காக மது அருந்த வரும் ஏழை மக்களிடம் மதுபாட்டிலுக்கு அதிக விலை கேட்பது மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அவர்களுக்கும் அதே போல் மண்டல மேலாளர்களுக்கும் தெரிந்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அதே போல் மதுக்கடை மேர்பார்வையாளரே பார் வைத்து நடத்துவதும் சில்லிங் விற்பனை செய்வது திண்டுக்கல் மாவட்டத்தில் வேடிக்கையாக உள்ளது.
அதேபோல் வேடசந்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர்க்கு தெரியாமலே அனைத்து சில்லிங் பார்களுக்கு சீல் வைத்ததும் மீண்டும் அந்த கடையை நடத்த அரசியல் வாதிகளே மீண்டும் திறந்து சில்லிங் விற்பனை செய்து வருவது குறிப்பிட தக்க ஒன்றாகும்.

பேட்டி-1:பிரகாஷ் ஒட்டன்சத்திரம்
பேட்டி-2:ரமேஷ் திண்டுக்கல்.Conclusion:திண்டுக்கல். 20.08.19
பதிலி செய்தியாளர் ம.பூபதி

ஒட்டன்சத்திரம்- பழனி சாலையில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்கள் அதிக விலை வைத்து விற்பதாக குடிமகன்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்.

குறித்த செய்தி
Last Updated : Aug 21, 2019, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.