திண்டுக்கல்: தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது கொடைக்கானல். இங்கு பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
காலாவதி
இத்தகைய சுற்றுலா பகுதியில் நகர், மேல்மலை, கீழ்மலை ஆகிய இடங்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலி ஸ்டிக்கர்
இதனைத்தொடர்ந்து கடைகளில் உரிய உரிமம் இன்றியும், உணவுப்பொருட்களின் காலாவதியைக் குறிக்கும் ஸ்டிக்கர்களை போலியாக மாற்றி ஒட்டியும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கோரிக்கை
எனவே, கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகலையும் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: தன்பால் ஈர்ப்பாளர்கள் தற்கொலை