ETV Bharat / state

பழனி அருகே கோயில் திருவிழாவில் ஆபாச நடனம்!

author img

By

Published : May 27, 2022, 11:45 AM IST

Updated : May 27, 2022, 12:10 PM IST

பழனி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச நடனம்
ஆபாச நடனம்

திண்டுக்கல்: பழனி அருகே தாசரிபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு, காவல் துறையினரின் அனுமதியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று (மே. 26) இரவு நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச நடனம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கூடாது என்றும், மீறி ஆபாச நடனம் ஆடினால் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆபாச நடனம்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், ஆபாச நடனம் நடைபெற்றுள்ளது. மேலும் காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தாமல் மௌனமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பப்ஜியால் நேர்ந்த கொடூரம்: மதுபோதையில் மனைவியைக் கொன்ற கணவன்

Last Updated : May 27, 2022, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.