திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சு வீடு போன்ற மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்கள் பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கரோனா பெருந்தொற்று காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளனர்.
இதனிடையே இங்குள்ள வனப்பகுதியில் சுற்றித் திரிந்த யானைகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்கிறது. அதிலும் யானைகள் பகல் நேரங்களிலேயே ஊருக்குள்ளும், விளை நிலங்களிலும் நுழைவதால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கு முன்பு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்த போது யானை தாக்கி சிலர் உயிரிழந்துள்ளனர் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
முன்னதாக இது குறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் யானைகள் பகல் நேரத்திலேயே உலா வருகிறது.
யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்!
திண்டுக்கல்: கொடைக்கானலில் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த யானைகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வதால், பொதுமக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர்.