திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் அமைந்துள்ள தலைமை மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
மின்வாரியத்தில் தினக்கூலியாக 380 ருபாய் வழங்க வேண்டும் என்றும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவரும் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பணிபுரிந்த மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை, மின்வாரியத்தில் பணிநிரந்தரம் செய்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து தங்களிடம் பணியை மட்டும் வாங்கிக் கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய தொழிலாளர்களைத் தடுத்துநிறுத்தி கைது செய்தனர்.
இதையும் படிங்க:
பிளாஸ்டிக்கை உண்டதால் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு!