ETV Bharat / state

'கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுக' - PMயிடம் CM கோரிக்கை

author img

By

Published : Nov 11, 2022, 6:33 PM IST

கல்வியை மீண்டும் மாநிலத்தின்கீழ் கொண்டுவரவேண்டும் என மேடையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

’கல்வியை மீண்டும் மாநிலத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்...!’ - மேடையில் மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல்: சின்னாளப்பட்டி அடுத்துள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த பவள விழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா இன்று(நவ.11) நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அதன் பின் பேசிய பிரதமர் மோடி, 'வணக்கம்...!, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது ஊக்கம் அளிக்கிறது. சுதேசி இயக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது, தமிழ்நாடு.

காந்தி கூறியபடி சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மத்திய அரசு பாடுபடுகிறது. ஒன்றுபட்ட சுதந்திரமான இந்தியாவுக்காக பாடுபட்டவர், மகாத்மா காந்தி. காந்தியின் முக்கியக்குறிக்கோள் கிராமப்புற வளர்ச்சிதான். கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம்.

விவேகானந்தருக்கு வீர வணக்கம் செலுத்தி வரவேற்ற பூமி, தமிழ்நாடு. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர். தமிழ்நாட்டின் மொழி, கலாசாரத்தை கொண்டாட காசி தயாராக உள்ளது. தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் கலாசாரத்திற்கு மதிப்பளிப்பதே தேச ஒற்றுமைக்குக் காரணம்.

கதர் என்பது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சங்க கால உணவுப்பொருள்களை மீண்டும் மக்கள் விளைவிக்க வேண்டும். இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய ஒளிமின் சக்தி பயன்பாடு 24 விழுக்காடு அதிகரித்துள்ளது" எனப் பிரதமர் மோடி பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''குஜராத்தில் பிறந்து ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு மிக மிக அதிகம்.

தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தியடிகள் அவர்கள் தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டவர். திருக்குறள் படிப்பதற்காகவே தமிழைப் படிக்க வேண்டுமென்று சொன்னவர். இவை அனைத்திற்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்கு நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது, இந்தத் தமிழ் மண். வட இந்தியர்கள் அனைவரும் தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டுமென்று சொன்னவர் காந்தியடிகள்' என காந்தியடிகள் குறித்த புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'கல்வி ஒன்றே எந்த சூழலிலும் எவரும் திருட முடியாத ஒரே சொத்து. அதன் வளமையை மேம்படுத்துவது மாநில அரசின் கடமையாகும். ஆகையால், மாநில அரசின் இத்தகைய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வியை மீண்டும் மாநில அரசின்கீழ் கொண்டு வர வேண்டுமென ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியலமைப்புச் சட்டம் தயார் செய்தபோது கல்வி, மாநில அரசின் கீழ் தான் வரையறுக்கப்பட்டது. பின், எமர்ஜென்சி காலகட்டத்தில் தான் அக்கல்வி ஒன்றிய அரசின்கீழ் மாற்றப்பட்டது. ஆகையால், நான் ஒன்றிய அரசையும், குறிப்பாக பிரதமர் அவர்களையும் கல்வியை மீண்டும் மாநிலங்களின் கீழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கோரிக்கை விடுத்துப்பேசினார்.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.