ETV Bharat / state

ஆயத்த ஆடைத் தொழிலையும் விட்டுவைக்காத பொருளாதார மந்தம்..! - நத்தம் பகுதி ஆண்களுக்கான ரெடிமேட் சட்டைகள்

திண்டுக்கல்: பொருளாதார மந்தநிலை காரணமாக நத்தத்தில் ஆயத்த ஆடைத் தொழில் பாதிக்கப்பட்டு பலர் வேலையிழந்துள்ளதாக ஆயத்த ஆடைத் தயாரிப்பாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Readymade shirt production dull as diwali festival in nearing
author img

By

Published : Sep 28, 2019, 9:00 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி ஆண்களுக்கான ஆயத்த ஆடைகளுக்கு பிரபலமானது. இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயது ஆண்களுக்கான ஆயத்த ஆடைகளும் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆயத்த ஆடை தொழிலில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பணியாற்றுகிறார்கள். அதேபோல் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது.

ஆண்களுக்கான ஒரு சட்டை தயாரிக்க கட்டிங் மாஸ்டர், செக்கிங் மாஸ்டர், அயர்னிங் மாஸ்டர், தையல் தொழிலாளி, பட்டன் வைப்பவர் என 13 பேர் வரை வேலை செய்கிறார்கள். காட்டன், நைலான், டெரிகாட்டன் என பலவகையான சட்டைகள் 150 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையிலான விலையில் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

இங்கு தயாராகும் ஆடைகள் கேரளா உட்பட தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இம்முறை பொருளாதார மந்தநிலை காரணமாக, தீபாவளிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையிலும் கூட இதுவரை எந்த ஒரு ஆர்டரும் வரவில்லை என்கின்றனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள்.

ஆடைத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

இதுகுறித்து பேசிய ஆயத்த ஆடை தயாரிப்பாளர் ஒருவர், ”தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே சென்னை, கோவை, மதுரை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்து ஆடைகளை வாங்கிச் செல்வார்கள். இதனால் தீபாவளிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே தொழில் களைகட்டி விடும். இதனால் எங்களுக்கு தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இம்முறை போதிய ஆர்டர் இல்லாததன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் கிட்டத்தட்ட 60 விழுக்காடு தொழிலாளர்கள் வேலையில்லாமல் வேறு ஊர்களுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த தீபாவளிக்கு கிடைத்த ஆர்டர் கூட இந்தாண்டு கிடைக்கவில்லை. இருப்பினும், அக்டோபர் மாத தொடக்கத்திலாவது ஆர்டர் வரும் என்று நம்புகின்றோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் அசால்டாக ஏறும் பயணி... நொடியில் நடந்த வீபரிதம்!

Intro:திண்டுக்கல் 28.9.19

தீபாவளி நெருங்கிய போதும் பொருளாதார மந்தநிலை காரணமாக நத்தத்தில் ஆயத்த ஆடை தொழில் சுணக்கம்.

Body:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி ஆண்களுக்கான ஆயத்த ஆடைகளுக்கு பிரபலமானது. இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயது ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆயத்த ஆடை தொழிலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பணியாற்றுகிறார்கள். நத்தம் முழுவதுமாக ஆயத்த ஆடைத் தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

ஆண்களுக்கான ஒரு சட்டை தயார் செய்ய கட்டிங் மாஸ்டர், செக்கிங் மாஸ்டர், அயர்னிங் மாஸ்டர், தையல் தொழிலாளி, பட்டன் வைப்பவர் என 13 பேர் வரை வேலை செய்கிறார்கள். காட்டன், நைலான், டெரிகாட்டன் என பலவகையான சட்டைகள் 150 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையில் இங்கு தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாராகும் ஆடைகள் கேரள மாநிலம் உட்பட தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இம்முறை பொருளாதார மந்தநிலை காரணமாக தீபாவளிக்கு ஒரு மாதமே ஆன நிலையிலும் கூட இதுவரை எந்த ஒரு ஆர்டரும் வரவில்லை என்கின்றனர்.

இது குறித்து பேசிய ஆயத்த ஆடை தயாரிப்பாளர் கூறுகையில், தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே சென்னை, தாம்பரம், கோவை, மதுரை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் சிறு சிறு வியாபாரிகள் இங்கு வந்து ஆடைகளை வாங்கி செல்வர். இதனால் தீபாவளிக்கு ஐந்து மாதங்கள் இருக்கும் போதே எங்கள் தொழில் களைகட்டி விடும். எங்களுக்கு தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும்.

ஆனால் இம்முறை போதிய ஆர்டர் இல்லாததன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கிட்டத்தட்ட 60 சதவீத தொழிலாளர்கள் வேலை இன்றி வேறு ஊர்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த தீபாவளிக்கு கிடைத்த ஆர்டர் கூட இந்த ஆண்டு கிடைக்கவில்லை. இருப்பினும் அக்டோபர் மாத தொடக்கத்தில் ஆவது ஆர்டர் வரும் என்று நம்புகின்றோம் என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.