ETV Bharat / state

சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் போதையில் தகராறு செய்த இளைஞர்கள்! - Drunk Men fight with driver

திண்டுக்கல்: கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்த இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொடைக்கானலுக்கு சுற்றுலா
kodaikanal tourist
author img

By

Published : Apr 7, 2021, 8:32 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு, நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதில் அதிகம் சுற்றுலாப் பயணிகள் கூடும் பகுதியாக ஏரிசாலை உள்ளது. இங்கு மதுரையில் இருந்து இரண்டு இளைஞர்கள் சுற்றுலா வந்தனர்.

இருவரும் அதிக மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏரிசாலை பகுதியில் வாகன ஓட்டி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்கியுள்ளனர். இதைக் கண்ட சக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இருவரையும் பிடித்து வைத்தனர்.

போதையில் தகராறு செய்த இளைஞர்கள்

தொடர்ந்து கொடைக்கானல் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தகராறில் ஈடுபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:திருநெல்வேலியில் வாக்குப்பதிவு குறைவு ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.