ETV Bharat / state

பஸ்சை வழிமறித்து உடலில் மண்ணெண்ணெயினை ஊற்றி தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமி - பரபரப்பு வீடியோ - திண்டுக்கல்லில் தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமி

வேடசந்தூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு

author img

By

Published : Jun 19, 2022, 7:33 PM IST

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாண்டி என்ற லிவர் பாண்டி(வயது 30). இவர் அய்யலூர் மேம்பாலம் அருகே சாலையோரம் பூக்கடை வைத்திருந்தார். அய்யலூரில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்ட போது ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கடைகளை காவல் துறையினர் அகற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டி புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று(ஜூன்.18) மதுபோதையிலிருந்த பாண்டி திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார்.

அவரை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தட்டிக்கேட்டபோது தான் வைத்திருந்த குச்சியால் அரசு பஸ்சை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். அதன் பின்னர் அரசுப்பேருந்தின் முன்னால் நின்றபடி தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு

இதனால் பாண்டி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அதன்பின்னர் அவர் உறவினர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மது போதை ஆசாமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி அரசு பஸ்சை வழிமறித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: வன்முறை எந்த மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் தவறு - நடிகை சாய்பல்லவி 'பளீச்' பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.