குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற உள்ள இந்து முன்னணி பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,
"குடியுரிமை திருத்தச் சட்டத்தை தவறான முறையில் பொய் பரப்புரையை மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் நாட்டின் பிரதமரை குற்றம் சொல்லி வருகின்ற தேர்தலில் தோற்கடிக்க முயற்சி செய்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திக, நக்சலைட்கள் சேர்ந்து மக்களிடத்தில் அச்சட்டத்திற்கு எதிர்ப்பாக இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களை தூண்டிவிடக்கூடிய திமுக வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலேயே இந்த இஸ்லாமியர்களாலேயே காணாமல் ஆக்கப்படுவார்கள். வரும் மார்ச் 10ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இந்து முன்னணி சார்பில் பேரணி நடைபெறுகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சிஏஏ நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது - திருமாவளவன் எம்.பி.