கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசிய பொருள்கள் வாங்கவரும் இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, கூட்ட நெரிசலுள்ள இடங்களில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் எம்.வி.எம் அரசினர் மகளிர் கல்லூரியிலும், அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு உள்ளே செல்பவரும், வெளியே வருபவரும் இந்த சுரங்கப்பாதை வழியாகச் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற, காவல் துறையினர் தொடர்ச்சியாக மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிவருகின்றனர்.
இதையும் படிங்க: தலை சுமையாக கொண்டு செல்லப்பட்ட உணவு பொருட்கள்