திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பச்சைமரத்து ஓடை, சின்னப்பள்ளம் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இருப்பினும் பல ஏக்கரில் அங்கிருந்த மரங்கள் தீயில் ஏரிந்து சாம்பலாகின.
தற்போது கோடை காலம் என்பதால் தீ விபத்து அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆகவே கொடைக்கானல் பகுதிகளில் சிறிய ரக தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ - போராடி அணைத்த தீயணைப்புத் துறை!