ETV Bharat / state

வீட்டுமனை பிரிக்க கையூட்டு பெற்ற மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்குநர் கைது - Urban Development officer arrested for receiving bribe

திண்டுக்கல்: வீட்டுமனை பிரிக்க அனுமதி வழங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு வாங்கிய உதவி இயக்குநரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Dindigul Urban Development officer arrested
மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்குநர் கைது
author img

By

Published : Jan 7, 2021, 10:34 PM IST

திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநராக முத்துகிருஷ்ணன் என்ற நபர் பணிபுரிந்துவருகிறார். இச்சூழலில் கரூரைச் சேர்ந்த நாட்ராயன் என்பவர் திண்டுக்கல் எரியோடு அருகே உள்ள தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை பிரித்து விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளார்.

அதற்காக திண்டுக்கல் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் உள்ள முத்துகிருஷ்ணனை அணுகியுள்ளார். அப்போது முத்துக்கிருஷ்ணன் ஒரு லட்ச ரூபாய் கையூட்டாக கேட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று (ஜன. 07) மாலை விவேகானந்தர் நகரில் உள்ள அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முத்துகிருஷ்ணனிடம் நாட்ராயன் பணத்தைக் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் முத்துகிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து, கைதுசெய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க... புதிய மின் இணைப்புக்கு கையூட்டு பெற்ற உதவிப் பொறியாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.