ETV Bharat / state

திண்டுக்கல்லில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: தலைமை அஞ்சல் நிலையம் முன்பு 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jan 8, 2020, 3:54 PM IST

தமிழ்நாட்டில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தம், மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதையும் படிங்க: வாயில் வாழைப்பழத்துடன் விவசாயிகள் நூதன போராட்டம்

Intro:திண்டுக்கல் 8.1.2020

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் தொழிற்சங்கத்தினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்.

Body:தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தக்கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது, பொதுத்துறையை பாதுகாத்திட வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள காலி இடங்களில் புதிதாக ஆள் நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி , சிஐடியூ , எல்பிஎப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தத்தின் ஓரு பகுதியாக திண்டுக்கல்லில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு
400க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல யூனியன் அலுவலகம் முன்பு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பபட்டன. Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.