தமிழ்நாட்டிலேயே பிரசித்திப்பெற்ற காய்கறி சந்தை என்றால் அது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைதான். இந்த காய்கறி சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து டன் கணக்கில் காய்கள் கொண்டுவரப்படுகின்றன.
அதேபோல் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்தும் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களிலிருந்தும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு காய்கறிகள் கொண்டுவரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவது வழக்கம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை இல்லாத காரணத்தால் தக்காளி வரத்து குறைந்திருந்தது. அப்போது ஒரு கிலோ தக்காளியின் விலை 45 முதல் 55 ரூபாய்வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை பெய்துவருவதால் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவு காய்கறிகள் வரத் தொடங்கியுள்ளன.
இதனால் தற்போது காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி வெறும் 15 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
கழிப்பறை கட்ட எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!