ETV Bharat / state

ICAR Exam: ஐசிஏஆர் தேர்வு - திண்டுக்கல் மாணவி சாதனை

அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐசிஏஆர் தேர்வில் (ICAR Exam) திண்டுக்கல் மாணவி ஒருவர் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/17-November-2021/13659252_tamilisai1.jpg

author img

By

Published : Nov 17, 2021, 5:00 PM IST

திண்டுக்கல்: இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச் அமைப்பானது (ICAR) ஆண்டுதோறும் எம்.வி.எஸ். படிப்புக்காக கால்நடைத் துறைக்கான அகில இந்தியத் தேர்வை நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான தேர்வானது செப்டம்பர் 17ஆம் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று (நவம்பர் 17) வெளியிடப்பட்டது.

இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி அ. ஓவியா, தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது இதனைப் பாராட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துச் செய்தி
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்துச் செய்தி

அதில், “அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வில், தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி செல்வி அ. ஓவியா தமிழ்நாட்டில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் வழிகல்வி பயின்ற தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலினுடன் அமித் ஷா பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.