ETV Bharat / state

'கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை..!' - திண்டுக்கல் சீனிவாசன் - திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: "அதிமுக கட்சிக்குள் எந்த குழப்பமும் கிடையாது" என்று, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்
author img

By

Published : Jun 9, 2019, 4:04 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ஜி.எஸ் நகரில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

"ஆட்சியும் கட்சியும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக கட்சியினுள் எந்த ஒரு குழப்பமும் கிடையாது. கணவன் மனைவி உறவு போன்று செயல்பட்டு வரும் நிலையில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையாவது பேசி விட முடியாது. அதிமுக ஆட்சியும் கட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்த குழப்பமும் கட்சிக்குள்ளே கிடையாது.

தமிழ்நாடு அமைச்சர்கள் எல்லோரும் முழுமனதோடு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ராஜன் செல்லப்பா யாரை சொல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என தெரிவித்தார்.

Intro:திண்டுக்கல் 09.06.19

அதிமுக ஆட்சியும் கட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எந்த குழப்பமும் கட்சிக்குள்ளே கிடையாது : திண்டுக்கல் சீனிவாசன்

Body:திண்டுக்கல் மாவட்டம் ஜி.எஸ் நகரில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், "ஆட்சியும் கட்சியும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்சியினுள் எந்த ஒரு குழப்பமும் கிடையாது எனக் கூறினார்.

பின்னர் ராஜன் செல்லப்பா அதிமுக தோல்வி மற்றும் இரட்டை தலைமையின் கீழ் எதற்காக செயல்பட வேண்டும் என்று விமர்சித்ததை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சில பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் பேச முடியாது. கணவன் மனைவி உறவு போன்று செயல்பட்டு வரும் நிலையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது பேசி விட முடியாது. தமிழக அமைச்சர்கள் எல்லோரும் முழுமனதோடு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ராஜன் செல்லப்பா யாரை சொல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

மேலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதுதான் மக்களுடைய தீர்ப்பு. இது எங்களுக்கு நல்ல படிப்பினையை கொடுத்துள்ளது. மக்களின் மனதில் இடம் பிடித்திட என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம். திமுக பொய்யான வாக்குறுதிகளையும் செய்ய முடியாததையும் சொல்லி மக்களை ஏமாற்றி வெற்றியடைந்துள்ளது. திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றியல்ல. விரைவில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மக்களை சந்தித்து நல்ல தீர்ப்பை பெறுவோம் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.