திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அலுவலகம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள செல்ஃபோன் கோபுரத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அந்த நபரின் உடலை மீட்டு சோதனை செய்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபர் தாராபுரம் அருகேவுள்ள பொன்னாபுரத்தைச் சேர்ந்த முருகன் (30) என்பது தெரியவந்தது.
ஆனால், பூட்டியிருந்த பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நுழைந்த ஒருவர் 120 அடி உயரமுள்ள செல்ஃபோன் டவரில் தற்கொலை செய்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் காவலாளி, கண்காணிப்புக் கேமராக்கள் எதுவும் இல்லாததால், தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதில் காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிவி உடைந்ததால் மாணவன் தற்கொலை!