ETV Bharat / state

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி உயிரிழப்பு! - ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு

பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நான்கு பேர் தீயில் கருகி உயிரிழப்பு
நான்கு பேர் தீயில் கருகி உயிரிழப்பு
author img

By

Published : Aug 21, 2021, 11:45 AM IST

Updated : Aug 21, 2021, 1:13 PM IST

திண்டுக்கல்: பழனியருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு என்கிற முருகேசன் (52). இவரது மனைவி வளர்மதி (45). இத்தம்பதியர்களுக்கு சிவரஞ்சனி (21) என்ற மகளும், கார்த்திகேயன் (18) என்ற மகனும் உள்ளனர்.

சின்னராசுவிற்கு ஐந்து ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் உள்ளது. இன்று (ஆகஸ்ட் 21) அதிகாலை 2 மணியளவில் மக்காச்சோளத் தட்டை தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சடலங்கள் கண்டெடுப்பு:

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது மக்காச்சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சின்னராசுவின் குடும்பம் தீயில் எரிந்தது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி உயிரிழப்பு

விசாரணையில் குடும்பத்தினர் நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்தது தெரிந்தது.

உடற்கூராய்வு:

வீட்டில் எவ்வித பொருளும் திருட்டு போகவில்லை என விசாரணையில் தெரிந்த நிலையில் உடற்கூறாய்வில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல் துறை டிஐஜி விஜயகுமாரி, தென்மண்டல ஐஜி அன்பு ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னராசுவின் குடும்பத்தில் கடன் பிரச்னையும் இல்லாத நிலையில் இந்த உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது

Last Updated : Aug 21, 2021, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.