ETV Bharat / state

திண்டுக்கல் மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா!

திண்டுக்கல்: கோட்டை மாரியம்மன், நத்தம் மாரியம்மன் ஆகிய கோயில்களில் மாசி பெருந்திருவிழா நடைபெற்றுவருகிறது.

நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா
நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா
author img

By

Published : Feb 25, 2020, 8:02 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தின் பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருட மாசி பெருந்திருவிழா கடந்த 20ஆம் தேதி பூ அலங்கார மண்டகப்படியுடன் தொடங்கியது‌.

இதனையடுத்து இன்று கோயில் மைய மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதற்காகச் சிறப்புத் திருமுழுக்கு ஆராதனைகள் அம்மனுக்கு நடத்தப்பட்டு கோயில் கருவறையிலிருந்து மாரியம்மன் உருவம் பொறித்த கொடிக்கம்பம் அருகில் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு கண் திறக்கும் வைபவம் நடந்தது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா

இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இன்று உலுப்பக்குடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள், தீர்த்தக் குடங்களுடன் சந்தனக்கருப்பு கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அங்கிருந்து மேளதாளத்துடனும், சிங்கார வர்ணக்குடையுடனும் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து வெள்ளிக் கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் 15 நாள்கள் விரதம் தொடங்குவதற்காக மஞ்சள் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வப்போது, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோயில்களுக்கு வந்து வழிபாடு செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலாய் கிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.