ETV Bharat / state

திண்டுக்கல் கருப்பணசாமி கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு; 24 பேர் காயம் - மாடு முட்டி காயம்

நத்தமாடிப்பட்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 24 பேர் காயமடைந்தனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 24, 2023, 10:55 PM IST

திண்டுக்கல் கருப்பணசாமி கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு; 24 பேர் காயம்

திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் நடைபெற்று வந்தது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி,சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 492 காளைகளும், 115 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னர் கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து 481 காளைகளுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து 102 மாடுபிடி வீரர்களுக்கு காளைகள் பிடிக்க அனுமதி அளித்தனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். காளைகளைப் போட்டி போட்டுக் கொண்டு மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, கட்டில்,பீரோ, குக்கர்,கேஸ் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 6 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 260க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தப் போட்டியில் பார்வையாளர்கள் 10 பேர், காளை உரிமையாளர்கள் 10 பேர், மாடுபிடி வீரர்கள் 4 பேர் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர் பள்ளியைச் சேர்ந்த மணிவண்ணன் (32), மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி (21), கொசவபட்டியைச் சேர்ந்த இருதயராஜ் (54),கைலாசம் பட்டியை சேர்ந்த ராஜ் (50) உள்ளிட்ட 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை - டெல்லி நிஜாமுதீன் ரயில் திண்டுக்கல் வரை இயக்கம் - தெற்கு ரயில்வே

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.