ETV Bharat / state

உடைந்த நிலையில் கதிர்நரசிங்கபெருமாள் கோயில் மதகு; வீணாகும் மழைநீர்! - திண்டுக்கலில் தொடர் மழை

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கபெருமாள் கோயில் கண்மாயில் மதகு உடைந்து மழைநீர் வெளியேறுவதால், மழைநீரைச் சேமிக்க முடியவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

dindigu
dindigull
author img

By

Published : Sep 7, 2020, 11:11 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கதிர்நரசிங்கபெருமாள் கோயில் பின்புறம் கோயில் குளம் உள்ளது. சுமார் 102 ஏக்கர் நிலப்பரப்புளவு கொண்ட இந்தக் கண்மாயில் தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் மூலம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பாக கோயில் குளம் கண்மாயில் மதகு, கலிங்கு பழுதுபார்த்தல், வரத்து வாய்க்கால் தூர்வாருதல், கரையைப் பலப்படுத்தும் பணிக்காக ரூ.20.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.

ஆனால் சிறு சாரல் மழைக்கே கண்மாயின் தென்புறம் உள்ள மதகு பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த மதகு சேதமடைந்து மூன்று மாதங்கள் ஆகியும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் மதகை இதுவரை சீர்செய்யவில்லை. இதனால் தண்ணீர் மதகு வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

திண்டுக்கல்
மதகு உடைந்து வீணாகும் நீர்
தற்போது திண்டுக்கல்லில் தொடர் மழை பெய்துவரும் சூழலில் 102 ஏக்கர் நிலப்பரப்புள்ள குளத்தில் மழைநீரைச் சேமித்துவைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழைநீர் சேமிக்கப்பட்டால் அருகிலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரம் உயரும். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெறுவர்.
இது குறித்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எம்.வி. ரெங்கசாமி கூறுகையில், "பலமுறை நங்காஞ்சியாறு வடிநிலைக் கோட்டம் பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தொடர் மழையால் அருகிலுள்ள வேலாம்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விபத்து ஏற்படும் இடர் உருவாகியுள்ளது. அவ்வாறு அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டால் அதற்குப் பொதுப்பணித் துறை அலுவலர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.