திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் முதலமைச்சர் குறைதீர் கூட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 433க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து நடகராட்சி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சீனிவாசன், அரசியலில் தற்போது வெற்றிடம் இல்லை, சினிமாவில்தான் உள்ளது. எம்ஜிஆர், சிவாஜி காலங்களில் படங்கள் நூறு நாட்கள் ஓடியத. தற்போதைய நடிகர்களின் படங்கள் அப்படி ஓடுவதில்லை என்று ரஜினியை விமர்சித்து பேசினார்.
கமல், ரஜினி இணைந்து அரசியல் பிரவேசம் செய்வது குறித்த கேள்விக்கு , முதலில் பெண் பார்க்கட்டும், அதன் பின்பு நிச்சயதார்த்தம், பிறகு கல்யாணத்தை பார்க்கலாம் என்று நகைச்சுவையாக கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், 58ஆம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருவது செய்தியாளர்கள் சொல்லித்தான் தெரியும். இத்திட்டம் குறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரிடம் எடுத்துரைப்பேன் என்று அவர் தெரிவித்தார்.