திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையான புல்லாவெளி பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக சுமார் ஒன்பது யானைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து மரங்களையும், பழங்களையும் அதிகளவில் சேதப்படுத்தி வருகின்றன.
கூலி ஆட்கள் கிடைக்காத காரணத்தாலும், காடுகளை சுத்தப்படுத்தாத காரணத்தாலும் பலாப்பழங்கள் இன்னும் மரத்திலிருந்து பறிக்கப்படாமல் உள்ளன. இதனால் பழத்தின் வாசனையை அறிந்து யானை கூட்டங்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
மாவட்ட வன அலுவலர் வித்யா உத்தரவின் பேரில், கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழுவினர் தீ வைத்தும், வெடிவைத்து சத்தமிட்டும், யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிங்க: முன்பு கர்ப்பிணி யானை… தற்போது கர்ப்பிணி பசு..!