ETV Bharat / state

தைப்பூசம்: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நெருங்கி வரும் நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

author img

By

Published : Jan 8, 2021, 6:05 AM IST

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வருகின்ற 22ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கி, 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், அன்று இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதமும் நடைபெறும். அதேபோல் 28ஆம் தேதி தைப்பூச திருவிழாவும், அன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெறும். 31ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சிக்கு பின் விழா முடிவடைகிறது.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு குறைவான குழந்தைகள் ஆகியோர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். வரிசையில் நிற்கும்போது 6 அடி இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற செயல்களை பக்தர்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

திருக்கோயிலில் பஜனைக் குழு, பக்தி இசைக்குழு நேரில் பாட அனுமதி கிடையாது. பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். அன்னதான உணவினை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தைப்பூச திருநாளை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.