திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் அங்கு வசித்துவருகிறார்.
இன்று காலை, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளையில் (சிலிண்டர்) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென உருளை வெடித்தது. இதில், கதவு ஜன்னல்கள் உடைந்து சமைத்துக் கொண்டிருந்த அங்குலட்சுமி, துவைத்துக் கொண்டிருந்த பாக்கியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மயங்கிய நிலையிலிருந்த இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க : ஜாகுவார் லேண்ட் ரோவர் காரின் விற்பனை சரிவு!