திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகளை சுகாதாரத் துறையினர் நேற்று வெளியிட்டனர்.
அதன்படி, திண்டுக்கல்லில் 64 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பயிற்சி ஆட்சியர், கரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிந்த மருத்துவர் ஆகியோரும் அடங்குவர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 100 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில் மொத்தம் 438 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.