ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் இறுதி வாக்களார் பட்டியில் வெளியிடப்படும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, "திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர், திண்டுக்கல், நத்தம் ஆகிய ஏழு சட்டபேரவைத் தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 95 ஆயிரத்து 174. இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 78 ஆயிரத்து 62 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 16 ஆயிரத்து 960 பேரும் உள்ளனர். இதேபோல இதர பிரிவினரும் 152 பேர் உள்ளனர்" என தெரிவித்தார்.
இந்தத் தகவலை தெரிவித்த உடன் ஆட்சியர் அங்கிருந்து சென்றுவிட்டார். கூட்டத்துக்கு வந்திருந்த கட்சிப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து எந்தவொரு நடவடிக்கை இல்லை என அங்கிருந்த அலுவலர்களிடம் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அலுவலர்கள் திணறியதால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு - வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு!