ETV Bharat / state

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு! - COLLECTORATE

திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கூறியுள்ளார்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
author img

By

Published : Mar 23, 2019, 10:59 PM IST

திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் மாற்று திறனாளிகளுக்கு தேவைப்படும் வசதிகள் உறுதிச் செய்யப்பட்டு வாக்களிப்பதற்கு ஏதுவான சிறப்பு அம்சங்கள் செய்யப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு உறுதி செய்யும் வகையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி அவர்களுக்கு தேர்தல் குறித்த வினாடி-வினா, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1790 வாக்குச்சாவடிகளும் நிலக்கோட்டை சட்டமன்றத் தேர்தலில் 266 வாக்குச்சாவடிகள் பொது மக்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரை பொறுத்தவரை கிராமங்களை விட நகர்ப்புறங்களிலேயே வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. இதனால் நகர் பகுதிகளில் தேர்தல் குறித்த தெருக்கூத்து, பாட்டு கச்சேரி விழிப்புணர்வு நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

மேலும் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக 21 பறக்கும் படை இருந்த நிலையில் தற்போது 41 ஆக உயர்த்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பாக 26 சோதனைச் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான எவ்வித தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்திற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 18004255965 இயங்கி வருகிறது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு எந்நேரமும் புகார் அளிக்கலாம். இதுவரை தேர்தல் விதிகளை மீறியதற்காக 79 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.

Intro:திண்டுக்கல் 23.3.19

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் பேட்டி.

Body:திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர்,"வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இதில் மாற்று திறனாளிகளுக்கு தேவைப்படும் வசதிகள் உறுதிச்செய்யப்பட்டு வாக்களிப்பதற்கு ஏதுவான சிறப்பு அம்சங்கள் செய்யப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு உறுதி செய்யும் வகையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி அவர்களுக்கு தேர்தல் குறித்த வினாடி-வினா, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1790 வாக்குச்சாவடிகளும் நிலக்கோட்டை சட்டமன்றத் தேர்தலில் 266 வாக்குச்சாவடிகள் பொது மக்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரை பொறுத்தவரை கிராமங்களை விட நகர்ப்புறங்களிலேயே வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. இதனால் நகர்ப் பகுதிகளில் தேர்தல் குறித்த தெருக்கூத்து, பாட்டு கச்சேரி விழிப்புணர்வு நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

மேலும் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக 21 பறக்கும் படை இருநத்நிலையில் தற்போது 41ஆக உயர்த்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பாக 26 சோதனைச் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உடன் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான எவ்வித தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்திற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 18004255965 இயங்கி வருகிறது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு எந்நேரமும் புகார் அளிக்கலாம். இதுவரை தேர்தல் விதிகளை மீறியதற்காக 79 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.