ETV Bharat / state

பாஜக சிறுபான்மைப் பிரிவு செயற்குழு கூட்டம் - Committee Meeting

திண்டுக்கல்லில் பாஜக சிறுபான்மைப் பிரிவு செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது.

பாஜக சிறுபான்மை பிரிவு செயற்குழு கூட்டம்

author img

By

Published : Aug 13, 2021, 7:33 AM IST

திண்டுக்கல்: பாஜக அலுவலகத்தில் சிறுபான்மைப் பிரிவு செயற்குழு கூட்டம் இன்று (ஆக.12) நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் தனபால் தலைமை வகித்தார்.

சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்மை வாக்குகளை பெறுவது குறித்து ஆலோசித்தார்.

அதைத் தொடர்ந்து இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களை ஒருங்கிணைத்து பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பெறுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். ஆனால், இதை பிரிவினைவாதிகள் தடுத்து வருகின்றனர்.

திமுக மீது குற்றச்சாட்டு

இந்திய இறையாண்மைக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஜனநாயக மாண்பை மீறி காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளும் சபாநாயகருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து புத்தகங்களைக் கிழித்து ஒரு கறுப்பு நாளை நிகழ்த்தியுள்ளனர். இதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

பாஜக சிறுபான்மை பிரிவு தேசியசெயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் பேட்டி

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறவில்லை. அதனால் அங்கு வெற்றி பெற்றவர்களை எப்படியாவது இழிவுபடுத்த வேண்டும், மக்களிடம் தவறாக சித்தரிக்க வேண்டும் என்பதற்காக வேலுமணி உள்ளிட்ட பலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக தொடுத்துள்ள இந்த ரெய்டை பாஜக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. திமுகவின் மோசடி, நம்பிக்கை துரோகத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல நினைக்கும்போது காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு பாஜக பிரமுகர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இஸ்லாமிய சகோதரர்களை தவறான முறையில் மூளை சலவை செய்கின்றனர். திமுக தனது தவறுகளை மறைப்பதற்காக பாஜக மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.

விலைவாசி குறையும் என்று கூறினார்கள். அன்றாட தேவைக்குரிய அரிசி, பருப்பு உள்ளிட்டவை விலை உயர்ந்த பொருள்களாக மாறிவிட்டன. வாக்குறுதி அளித்த திட்டங்களை செய்யாததால் அவற்றை மறைப்பதற்காக அடுத்தவர்களை குற்றம் சொல்லி தங்களது குறைகளை மறைத்துக் கொண்டுள்ளனர். திமுக விவாதத்திற்கு தயாரானால் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு செய்துள்ள திட்டங்களை சொல்கிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: நானும் ராகுல் தான் - ட்விட்டருக்கு சாவல் விடும் காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.