ETV Bharat / state

திண்டுக்கல்லில் குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு! - children drowned in lake

திண்டுக்கல்: கொண்டையாபிள்ளை குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

villagers
villagers
author img

By

Published : Sep 3, 2020, 9:08 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் அருளானந்தம் என்பவரது மகன் சதீஷ் அருளானந்தம், பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ராகுல், சிறுமலைப் பிரிவைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் சுஜித் ஆகிய மூன்று பேரும் பள்ளி நண்பர்கள்.

இந்நிலையில் இவர்கள் மூவரும் சிறுமலைப் பிரிவில் உள்ள கொண்டையாபிள்ளை குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று சிக்கியதைப் பார்த்த மற்ற இரண்டு சிறுவர்களும் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களும் குளம் ஆழத்தின் காரணமாக தண்ணீரில் சிக்கி தத்தளித்துள்ளனர்.

dindigul-3-children-drowned-in-lake-police-under-investigation
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள்
இதனைக் கரையில் இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து, அப்பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்‌. தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் சம்பவ இடம் வந்த தீயணைப்புப் படை வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் ராகுல், சுஜித், சதீஷ் ஆகியோர் உடலை மீட்டனர்.

கதறும் சிறுவர்களின் பெற்றோர்
இதனிடையே சம்பவ இடம் வந்த காவல் துறையினர் உயிரிழந்த சிறுவர்கள் மூன்று பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.