ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.5 லட்சம் பேருக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து வழங்கிவருகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து, அதன் நகலை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் கொடுத்து நிவாரணத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிவாரணத்தொகை ஜூலை 1ஆம் தேதிமுதல் ஜூலை 8 வரை அவரவர்களின் வீடுகளுக்குச் சென்றே வழங்கப்படும். மேலும் நிவாரணத் தொகை பெறுவதில் ஏதேனும் சிரமம் இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04512460099 அல்லது 9499933474 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம். உதவித்தொகை கிடைக்கவில்லை என்றால் மாநில மைய எண் 18004250111 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்...!