கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை மார்ச் 31 வரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதேபோல், முக்கியக் கோயில்களுக்கு பக்தர்கள் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக பழனி முருகன் கோயிலுக்குச் சாமி தரிசனம்செய்ய வந்த பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் பெருமளவில் கோயிலுக்கு வராமல் வெறிச்சோடி இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் நாளை முதல் பழனி மலைக்கோயில், அதனைச் சார்ந்த உப கோயில்களிலும் சாமி தரிசனம்செய்ய பக்தர்களுக்குத் தடைவிதிக்கப்படுவதாகக் கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்தார். ஆன்மிக விதிப்படி ஆறு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மார்ச் 22ஆம் தேதி கோயம்பேடு சந்தை மூடப்படும்'