திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்.14) தமிழ்ப் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றுடன் ஸ்ரீ பிலவ ஆண்டு நிறைவடைந்து, சித்திரை முதல் நாளான இன்று சுபகிருது ஆண்டு தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாடு மட்டுமின்றி நாடுமுழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இன்று அதிகாலையில் கனி வகைகள், கண்ணாடி ஆகியவை வைத்து வழிபாடு நடத்தி, புத்தாடை அணிந்து தமிழ்ப்புத்தாண்டை வழிபாடு நடத்தி வரவேற்றனர். இதன்படி பழனி மலைக்கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை பழனி கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய குவிந்தனர்.
இதையும் படிங்க: 'பாண்டியரு சொக்கனிடம் பாசம் வைச்ச மீனாட்சிக்கு' கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்