தமிழ்நாடு கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஏழு மாதங்களுக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வரத்தின்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகின்றன.
அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டும் செயல்பட்டுவருகின்றன. மேலும், கொடைக்கானலில் அத்தியாவசிய காரணமின்றி வெளியே சுற்றி திரிபவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைக்கின்றனர்.