திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வரும் கொடைக்கானலில், தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு தற்போது கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பூங்காகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நகரை சுற்றிப் பார்க்க வரும் பயணிகள் அதிகம் ரசிக்க கூடும் இடமாக இருக்கும் பிரையண்ட் பூங்காவில், கண்ணை கவரும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கிறது.
இந்தப் பூங்காவின் மத்தியில் இசை நீரூற்று ஒன்று உள்ளது. பல மாதங்களாக செயல்படாமல் இருக்கும் இந்த நீரூற்றில், பல்வேறு விதமான செடிகளும், ஆகாய தாமரையும் வளர்ந்துள்ளது. மேலும், அந்தப் பகுதியைச் சுற்றிலும் புதர்கள் மண்டி துர்நாற்றம் வீசி வருகிறது.
தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ள சூழ்நிலையில், செயல்படாமல் இருக்கும் இந்த இசை நீருற்று முகம் சுளிக்கும் விதமாக காணப்படுகிறது. எனவே இசை நீருற்றை பராமரித்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகள் வருகையால் வால்பாறையில் கரோனா தொற்று பரவும் அபாயம்