டெல்லியில் பெண் பாதுகாப்பு அலுவலர் சிலரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டிக்கும்விதமாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.
அந்த வகையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் கொடைக்கானலில் இன்று நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும் என கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![கொடைக்கானலில் கண்டன ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-muslim-protest-vs-spt-tn10030_09092021123742_0909f_1631171262_451.png)
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணி பரப்புரையாளர் தற்கொலை