திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புரெவி புயல் காரணமாக காற்றுடன்கூடிய மழை பெய்ததால் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நகப் பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கொடைக்கானல் சாலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடைசெய்யப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கொடைக்கானல் நுழைவு வாயிலான காமக்காபட்டி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானல் அருகே பூம்பாறை செல்லக்கூடிய சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், வாகன ஓட்டிகள் ஈடுபட்டுவந்தனர், இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: புரெவி புயல் வலுவிழந்த காரணத்தினால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்