ETV Bharat / state

ஏடிஎம்-ஐ கல்லால் உடைத்த லாரி ஓட்டுநர் கைது! - திண்டுக்கல்லில் ஏடிஎம்-ஐ கல்லைப் போட்டு உடைத்தவர் கைது

திண்டுக்கல்: வத்தலக்குண்டில் ஏடிஎம் இயந்திரத்தில், பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை மிதித்து, கல்லால் உடைத்த லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உதைக்கும் காட்சி
ஏடிஎம் இயந்திரத்தை உதைக்கும் காட்சி
author img

By

Published : Jan 6, 2020, 11:34 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை காலால் மிதித்து, கல்லால் உடைத்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் பரிவர்த்தனைக்காக பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏடிஎம் இயந்திர அறைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்கு முற்பட்டுள்ளார்.

ஏடிஎம் இயந்திரத்தை உதைக்கும் காட்சி

ஆனால், இயந்திரத்தில் பணம் இல்லாததால் அவருடைய தொகை வரவில்லை. பலமுறை முயற்சித்தபோதும் பணம் வராததால் ஆத்திரமடைந்த அவர் ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்துள்ளார்.

பின்பு, ஏடிஎம் இயந்திரத்தை விட்டு வெளியே சென்ற அவருக்கு ஆத்திரம் அடங்காததால் வெளியிலிருந்த பெரிய கல்லை எடுத்துவந்து ஏ.டி.எம் இயந்திரத்தின் மீது வீசி அதனை உடைத்துவிட்டு தப்பி ஓடினார். இதனால், அவருக்குப் பின்னால் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து வங்கி மேலாளர் சரண், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். அதில், ஏடிஎம் இயந்திரத்தை காலால் மிதித்து, கல்லைத் தூக்கி வீசி உடைத்தது சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் கற்றுக்கொண்டு ஏடிஎம்மில் திருட முயன்றவர் கைது

Intro:திண்டுக்கல் 5.1.2020

வத்தலக்குண்டில் ஏ.டி.எம்ல், பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை எட்டி உதைத்து கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்த லாரி டிரைவர்.
Body:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து கல்லை துக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலக்குண்டில் திண்டுக்கல் சாலையில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் பரிவர்த்தனைக்காக பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் இயந்திர அறைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்கு முற்படுகிறார். அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. பலமுறை முயற்சி செய்து பார்க்கிறார் ஆனால் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்தார். பிறகும் ஆத்திரம் அடங்காதால் வெளியில் இருந்த கல்லை எடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தின் மீது வீசி அதனை உடைத்து விட்டு தப்பி ஓடினார். இதனால் அவருக்குப் பின்னால் பணம் எடுக்க வந்த வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இவை அனைத்தும் அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சரண் அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவங்கினர். ஏ.டி.எம் மிஷினை காலால் எட்டி உதைத்து கல்லை தூக்கி வீசி உடைத்த சம்பவத்தை அரங்கேற்றிய சேவுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை வத்தலக்குண்டு போலீஸார் கைது செய்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.