திண்டுக்கல்: இயற்கை அழகை கொஞ்சும் கொடைக்கானல், விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சீத்தாப்பழத்தை அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள இப்பழம், பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கொடைகானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இதனை விரும்பி வாங்கிச்செல்வர். கொடைக்கானல்கீழ் மலைப்பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி,பள்ளங்கி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் தற்போது சீத்தாப்பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளது.
காலநிலைக்கு ஏற்ப தற்போது விளைச்சல் குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது சீத்தாப்பழத்தின் விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்து வந்தாலும், குறைந்து வரும் சீத்தா பழங்களின் விவசாயத்தை ஊக்குவிக்க, தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மயிலையில் சாலையோர கடைகளில் சாதாரணமாக காய்கறி வாங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்