கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போதுவரை ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 215 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை மக்கள் பலர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தெருக்களில் வழக்கம்போல் சுற்றிவருகின்றனர். ஒரே இடத்தில் கூட்டம், கூட்டமாக கூடுகின்றனர். இவற்றைத் தடுக்கும் வகையில், காவல் துறையினர் ஒவ்வொரு தெருவாகச் சென்று கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பரப்புரையை ஒலிபரப்பவேண்டும் என அறிவுறித்தியுள்ளார்.
இனிவரும் நாட்களில் விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு: காவல் துறையினரின் வாகனப் பேரணி