திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா நாகைய கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் மேலாக மானாவாரிப் பயிர்களான மக்காச்சோளம், கடலை, உளுந்து உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பருவமழை சரிவரப் பெய்யாததால் 1000 ஏக்கர் பயிர்களும் தண்ணீரின்றி கருகிப் போய்விட்டன. அதனால் அப்பகுதி விவசாயிகள் இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள், "நாகைய கோட்டையிலுள்ள புதுரோடு, கல்லுக்கோட்டை, செண்டுவழி, பண்ணப்பட்டி, தோப்புர் வைவேல்புரம், சவுரியார்பட்டி, செங்கோட்டைபட்டி, சிக்கனப்பட்டி, காளியம்பட்டி, பள்ளிக்குடத்தான் புதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிர்கள் நீரின்றி கருகிவிட்டன.
கரோனா காலம் என்பதால் விவசாயிகள் பலர் பயிர் காப்பீடு செய்ய தவறிவிட்டனர். கடன் வாங்கி பயிரிட்ட அத்தனை பயிர்களும் பயனற்றுவிட்டன. எனவே எங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதாக கூறி ரூ.2.40 கோடி மோசடி!