திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராமப்புற ஊராட்சிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்திட போதுமான நிதி இல்லாத காரணத்தால் குடிநீர் பராமரிப்பு பணிகள், மழைநீர் வடிகால், கழிப்பிடங்கள், தண்ணீர் வசதி போன்ற அத்தியாவசிய பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்களை தாமதமின்றி நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தில் இணைப்பு கட்டணத்தை மூன்றாயிரத்திலிருந்து ஆயிரம் ரூபாயாகக் குறைக்க வேண்டும், அதனையும் மக்கள் தவணை முறையில் செலுத்த அனுமதிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.