திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவிற்கு உள்பட்ட கள்ளிமந்தயம் அருகேயுள்ள கொத்தயம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 2014ஆம் ஆண்டு பிரகாஷ் என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது குறித்து கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒட்டன்சத்திரம் லக்கயன்கோட்டையைச் சேர்ந்த முனியப்பன் மகன் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரகாஷ் என்பவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து குற்றவாளி பிரகாஷ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.