திண்டுக்கல்: கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகளின் வருகை அதிகரித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் இடையே தனிமனித இடைவெளி முற்றிலும் இல்லாமல் போனது.
இதனைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் சவால் ஏற்பட்டது. இதனையடுத்து, சில வாரங்கள் மாவட்ட நிர்வாகம் கரோனா விதிமுறைகளை கடுமையாக்கியது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கரோனா பரிசோதனை கட்டாயம்
தற்போது, வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனைச் சாவடியில் உள்ள காவல் துறையினர், சுற்றுலாப் பயணிகள் கரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என அறிவித்தனர். இந்த நடவடிக்கையால் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே வருகை புரிகின்றனர்.
விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ள நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை இல்லை - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா