ETV Bharat / state

மருத்துவமனை தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நீளும் கரோனா!

author img

By

Published : Jul 15, 2020, 3:02 AM IST

திண்டுக்கல்: கோபால்பட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மேலும் பத்து ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona stretching from the hospital to the collector's office!

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதையடுத்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 18 பேருக்கும் கரோனா கண்டறிதல் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் 10 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின் பாதிக்கப்பட்ட அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சம்மன் வழங்கும் அலுவலகம் மூடப்பட்டது.

இதேபோல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் இரண்டு பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே நாளுக்கு நாள் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய நகர் பகுதிகளை தடுப்புகள் அமைத்து நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.